குருதிக் கொடையாளர்
- திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவ அணி சார்பில் குருதிக் கொடை இணையதளத்தில் இரத்ததானம் செய்ய விரும்புவோர் இங்கே பதிவு செய்யலாம்.
- பதிவு செய்வோர் 18 வயதுக்கு மேல் 60 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
- பதிவு செய்யும் நபர் 50 கிலோ எடைக்கு மேல் இருக்க வேண்டும்.
- உங்கள் தொலைபேசி எண் உள்ளிட்ட எந்த விபரங்களும் எவருடனும் பகிர்ந்துகொள்ளபடமாட்டாது.
- இரத்தம் தேவைபடுவோர் எங்கள் இணையதளத்தின் மூலம் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொடர்புகொள்வர்.
- நீங்கள் விரும்பினால், குறுஞ்செய்தியில் வந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு, நோயாளி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் எண்ணை பெற்று உறுதிசெய்த பின் இரத்த தானம் செய்யலாம்.
- அவசர தேவைகளுக்கு எங்கள் சேவை மையம் உங்களை நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும்.
- நீங்கள் கொடுக்கும் இரத்தம் ஒரு உயிரை காப்பாற்ற உதவலாம்!
குருதி தேவைப்படுவோர்
- திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவ அணி சார்பில் இயங்கும் "குருதிக் கொடை" இணையதள சேவை முற்றிலும் இலவச சேவையாகும். ஆகவே வியாபார நோக்கத்துடன் இரத்தம் தேவை என பதிவு செய்யக்கூடாது.
- இரத்தம் தேவை என பதிவுசெய்யும் போது உபயோகத்தில் இருக்கும் தொலைபேசி எண்ணை கொடுங்கள். ஏனெனில் அந்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு எண் அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளிட்டால் மட்டுமே இணையதளத்தில் பதிவுசெய்ய முடியும்.
- கொடையாளிகளுக்கு நீங்கள் இணையதளத்தின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம். கொடையாளர்களின் விருப்பத்தின் பேரில் அவர்கள் உங்கள் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து தொடர்புகொள்வர்.
- கொடையாளியின் இரத்தம் நோயாளிக்கு செலுத்த ஏற்றதா என பரிசோதித்து அதை மருத்துவர்களிடம் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
- கொடையாளி தொடர்பு கொள்ளும் போது அவருக்கு நோயாளி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை கொடுக்கவேண்டும்.
- கொடையாளியை கனிவோடு நடத்துங்கள். அவர் ஒரு உயிரை காப்பாற்ற தானம் செய்ய முன்வந்தவர் என்பதை நினைவில் கொள்க.