தி.மு.க மருத்துவ அணி

கொடையாளர் பதிவு

தி.மு.க மருத்துவ அணி

DMK Blood Donation website and app lanch by DMK medical wing. DMK Blood Donation saving lives of those who are in immediate need of blood. Blood donation, DMK Blood Donation, DMK Blood Donation App, blood donors in Tamilnadu, online blood donors, dmk blood donation website, DMK Medical wing, online blood bank, blood donor search, Blood groups, blood donors helpline,Blood Donors in Chennai, Madurai, Kanyakumari, Tirunelveli, Thoothukudi, Theni, Vellor, Salem and Trichy.

1. இரத்தப்பிரிவு
2. மாவட்டம்
3. தாலுகா

திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவ அணி சார்பில் செயல்படும் குருதிக் கொடை இணையதளம் நம் நாட்டில் பெருகிவரும் குருதி தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு எங்கோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் தன்னார்வ கொடையாளர்கள் மூலமே 93% இரத்தம் கிடைக்கிறது. முற்றிலும் சேவை நோக்குடன் செயல்படும் குருதிக் கொடை இணையதளம், தானம் செய்ய விரும்பும் தன்னார்வ கொடையாளர்களையும் இரத்தம் தேவைப்படுவோரையும் இணைக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது.

இரத்த தானம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்
  • ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 கோடி அலகு இரத்தம் தேவைப்படுகிறது, ஆனால் கிடைப்பதோ வெறும் சுமார் 40 லட்சம் அலகு மட்டுமே (1 அலகு இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்).
  • இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு கணிசமாக குறையும். நம் உடலில் தினந்தோறும் புதிய இரத்தம் உற்பத்தியாகிறது. ஆகவே இரத்த தானம் செய்வதினால் நமக்கு நன்மையே தவிர தீங்குகள் ஏதும் இல்லை.
  • ஒருவர் இரத்த தானம் செய்வதால் 3 பேரின் உயிர்களை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது. சிவப்பணுக்கள்,தட்டணுக்கள்,இரத்த நீர் என பிரிக்கப்பட்டு 3 பேருக்கு அந்த குருதி செலுத்தப்படலாம்.
  • இரத்த தானம் செய்ய செலுத்தப்படும் ஊசி, சிறிய எறும்பு கடிதாற் போலதான் இருக்கும். இரத்த தானமானது 5 முதல் 7 நிமிடங்களில் முடிந்துவிடும்.
  • ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறையும் பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறையும் குருதி வழங்கலாம்.
  • 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும், 50 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம்.
  • இரத்த தானம் செய்பவரின் இரத்தத்தை பரிசோதித்து தொற்று நோய் எதுவும் இல்லை என தகுதி பெற்ற மருத்துவர் ஒருவர் உறுதி செய்த பின்னரே நோயாளிக்கு செலுத்த வேண்டும்.
  • அதிகமாக தேவைப்படும் இரத்தம் "O " பிரிவு ஆகும்.


dmk blood donation registration
குருதி தேவை

3873

dmk blood donor
குருதி கொடையாளர்கள்

7461

சமீபத்தில் இரத்த தானம் செய்தோர்


  • ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 கோடி அலகு இரத்தம் தேவைப்படுகிறது, ஆனால் கிடைப்பதோ வெறும் சுமார் 40 லட்சம் அலகு மட்டுமே (1 அலகு இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்).
  • இரத்ததிற்கு மாற்று எதுவுமே கிடையாது. இரத்ததை செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது. இரத்த தானம் மட்டுமே ஒரே வழி.
  • ஒவ்வொரு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது.
  • ஒவ்வொரு நாளும் 38,000-க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை.
  • பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் இரத்தம் தேவைப்படும்.
  • நீங்கள் கொடுக்கும் 1 யூனிட் இரத்தம் அதிகபட்சமாக 3 பேரின் உயிரை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது.
  • இரத்த தானம் செய்பவர் 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
  • இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  • இரத்த ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • இரத்ததானம் வழங்குவதற்கு 24 மணிநேரத்திற்குள் மது அருந்தியிருக்க கூடாது.
  • கடந்த மூன்று மாதங்களுக்குள் இரத்ததானம் செய்திருக்க கூடாது.
  • எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்தம் கொடுக்க கூடாது.
  • இதய நோய், உயர் ரத்த அழுத்தம், கேன்சர், வலிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்த தானம் செய்ய கூடாது.
  • காசநோய், ஆஸ்துமா, ஒவ்வாமை குறைபாடு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால் இரத்த தானம் செய்ய கூடாது.
  • எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருந்தால் இரத்த தானம் செய்ய கூடாது.
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இரத்த தானம் செய்ய கூடாது.
  • கடந்த 6 மாதங்களுக்குள் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள் இரத்தம் கொடுக்க கூடாது.
  • கடந்த ஒரு மாதத்திற்குள் நோய் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
  • கடந்த 6 மாதத்திற்குள் வெறிநாய் கடிக்காக சிகிச்சை பெற்றவர்கள் இரத்த தானம் செய்ய கூடாது.
  • கடந்த 6 மாதத்திற்குள் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரத்த தானம் செய்ய கூடாது.
  • உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  • தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
  • ஹீமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் உதவுகிறது.
  • இரத்த தானம் செய்வதன் மூலம் மண்ணீரல் புத்துணர்ச்சி பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  • இரத்த தானம் செய்ய தகுதியுள்ள உடல்நிலை கொண்டுள்ள ஒருவர் இரத்த தானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது.
  • இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
  • ஒரு உயிரை காக்க உதவிய மன திருப்திக்கு ஈடு வேறு ஏதும் இல்லை என்றால் அது மிகையல்ல.
  • நிறைய தண்ணீர், உணவு போன்றவற்றை மறவாமல் அருந்துங்கள். கொழுப்புப் பண்டங்களை தவிர்த்திடுங்கள்.
  • செளகரியமான தோள் பட்டையின் மேலே எளிதாக ஏறும்படியாக உடைகளை அணிந்து செல்லுங்கள்.
  • இரத்த தானம் செய்யும் 24 நேரத்திற்குள் மது அருந்துதல் கூடாது.
  • இரத்தம் கொடுக்கும் முன் சிரமமான உடற்பயிற்சிகளை தவிர்த்திடுங்கள்
  • ஊசிக் கண்டு பயம் கொள்ளாமல், நிதானமாக மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
  • ஊசிப் போடும் போது சிறிய எறும்பு கடிதாற் போலதான் இருக்கும். இரத்த தானமானது 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்.
  • தகுதி பெற்ற மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீஷியன், நவீன ஆய்வு கருவிகள், பரிசோதனை கூடம், குளிர்சாதன வசதி உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளும் வேண்டும்.
  • இரத்தம் கொடுக்க வருபவரிடம் தடுப்பூசி, தொற்றுநோய், வலிப்பு, ஒவ்வாமை உள்ளதா? போன்ற தேவைப்படும் விபரங்களை கேட்டு பெறவேண்டும்.
  • இரத்தம் எடுக்கும் போது இரத்தத்தின் பிரிவு, எச்.பி. அளவு மற்றும் இரத்த தானம் செய்பவரின் உடல் எடையை பார்க்க வேண்டும். ஒருவரிடமிருந்து 350 மி.லி. இரத்திற்கு மேல் எடுக்க கூடாது.
  • இரத்தத்தின் மாதிரிகளை ஆய்வு கூடத்திற்கு கொண்டு சென்று அதில் எச்.ஐ.வி., மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எச்.பி.வி. ஆகிய 5 நோய் தொற்றுக்கான அறிகுறி இருக்கிறதா என பகுப்பாய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.
  • தொற்று நோய் எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகு தகுதி பெற்ற மருத்துவரின் ஒப்புதல் பெறவேண்டும்.
  • அதன் பிறகுதான் அந்த இரத்தபை இரத்த வங்கியில் சேமிக்கபடவேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு பை இரத்தமும் தீவிர பரிசோதனைக்கு பிறகே ஸ்டோரேஜ் செய்ய வேண்டும்.
குருதிக் கொடை அட்டவணை
குருதி பிரிவு குருதி கொடுக்கலாம் குருதி பெறலாம்
A+ A+ AB+ A+ A- O+ O-
O+ O+ A+ B+ AB+ O+ O-
B+ B+ AB+ B+ B- O+ O-
AB+ AB+ அனைவரிடமிருந்தும் பெறலாம்
A- A+ A- AB+ AB- A- O-
O- அனைவருக்கும் கொடுக்கலாம் O-
B- B+ B- AB+ AB- B- O-
AB- AB+ AB- AB- A- B- O-
The DMK blood donation website, works on behalf of the DMK state medical wing of the Dravida Munnetra Kazhagam. This website has been created to address the growing need for blood in our country. The DMK blood donation helps in saving lives of those who are in immediate need of blood. DMK blood donation website serves as a link bridge connecting volunteer donors and those in need of blood.
dmk blood donors
இரத்த தானம் பற்றிய வரலாறு

1665-ஆம் ஆண்டு ஆங்கில மருத்துவர் ரிச்சர்ட் லோவர் என்பவர் நாயின் இரத்தத்தை இன்னொரு நாய்க்கு செலுத்தி வெற்றிகண்டார். இதன் பரிணாம வளர்ச்சியாக 1818-ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிளன்டல் என்பவர் மனிதனுக்கு இன்னொரு மனிதனின் இரத்தத்தை செலுத்தி வெற்றிகண்டார். பின்னர் 1900-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற கார்ல் லேன்ட்ஸ்டைனர் என்பவர் A,B,O என இரத்த பிரிவுகளை கண்டுபிடித்தார். 1914-ஆம் ஆண்டு அடோல்ப் குஸ்டின் என்பவர் இரத்தத்தை சேமித்து வைக்கும் முறையை கண்டுபிடித்தார். இதன் விளைவாக 1937-ஆம் ஆண்டு முதல் இரத்த வங்கி மருத்துவர் பெர்னார்ட் பேன்டஸ் அவர்களால் சிக்காகோவிலுள்ள கூக் கண்ட்ரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.

dmk blood donation play store
dmk blood donation app store
dmk blood donation
இரத்த தானம் பற்றிய வரலாறு

1665-ஆம் ஆண்டு ஆங்கில மருத்துவர் ரிச்சர்ட் லோவர் என்பவர் நாயின் இரத்தத்தை இன்னொரு நாய்க்கு செலுத்தி வெற்றிகண்டார். இதன் பரிணாம வளர்ச்சியாக 1818-ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிளன்டல் என்பவர் மனிதனுக்கு இன்னொரு மனிதனின் இரத்தத்தை செலுத்தி வெற்றிகண்டார். பின்னர் 1900-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற கார்ல் லேன்ட்ஸ்டைனர் என்பவர் A,B,O என இரத்த பிரிவுகளை கண்டுபிடித்தார். 1914-ஆம் ஆண்டு அடோல்ப் குஸ்டின் என்பவர் இரத்தத்தை சேமித்து வைக்கும் முறையை கண்டுபிடித்தார். இதன் விளைவாக 1937-ஆம் ஆண்டு முதல் இரத்த வங்கி மருத்துவர் பெர்னார்ட் பேன்டஸ் அவர்களால் சிக்காகோவிலுள்ள கூக் கண்ட்ரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.

The DMK medical wing will launch a mobile app to help people in need of blood. Party president M K Stalin will launch the DMK Blood Donation App. According to a party statement, the app, meant to bridge the gap between blood donors and the needy, has been developed by the DMK doctors’ wing.

DMK Blood Donation Website - organized by DMK medical wing, We connect you with a blood donors/recipients in Tamil Nadu. People who need blood during operations or in any medical emergencies can make use of the app. The DMK will launch an application for blood donation, on Saturday. According to a party statement, the app, meant to bridge the gap between blood donors and the needy, has been developed by the DMK doctors’ wing. A team of experts will be available round the clock and take care of the requirements.

DMK Blood Donation

DMK to launch blood donation app, Download DMK blood donation App from DMKBloodDonation.com, The app is managed by the medical wing of the party. Do you want to become a Voluntary Blood Donor? Download DMK blood donation App.

Download our DMK Blood Donation App now! The DMK blood donation, help in saving lives of those who are in immediate need of blood. Blood donation,blood donors in Tamilnadu,online blood donors,blood donor registration,blood donors network,voluntary blood donor registration,blood donors website, online blood bank, blood donor search, blood groups, blood donors helpline.